Thursday, 27 June 2013

ஏளனம் செய்யாதே...
எரிந்து விடுவேன் நான்...

எப்படியும் உனை நோக்கி
எதிர் வருவேன் என நினைத்தாயோ??
எப்படி முடியும்?

எத்தனை மணித் துளிகள்
எண்ணம் கொண்டிருப்பேன்
என்னவளாய்....

ஏன் வெறுத்தாய் என்னை??
என்ன காரணமென்றால்,
எளக்காரம் செய்கிறாய்...

எப்படியும் இருக்க முடியும் என்னால்!!!
என்னவள் நீயின்றி,

எப்படி இருக்க முடியும்
என்னால்??
எதிர்பார்ப்புகளுடன்,

நான்

உன்ஈரக் கூந்தலில்வழிந்திருக்கும்சாரலில்,என்விழி நீரும்விலகிச் செல்லுதடி!!!

அடி ராட்சசியே...மண்டியிடுவதாய்ச்சொன்ன பிறகும்ஏனடிபோர் புரிகிறாய்??உன்காதல் விழிகளால்!!!

Sunday, 23 June 2013

அழுது அழுதுஅழிக்கிறேன் அன்பே - நீதந்த நினைவுகளை அல்லஉன் நினைவுகள்தந்த வலிகளை.

Saturday, 22 June 2013

எனக்கு இரண்டு காதலிகள்ஒருத்திஉன் வீட்டில்வசிக்கிறாள்இன்னொருத்திஎன் இதயத்தில்வசிக்கிறாள்.................................................உன்னைக்கண் திறந்துபார்க்கிறேன்அவளைகண் மூடிப்பார்க்கிறேன்.................................................அவளைக்கூட்டிக் கொண்டுதான்உன்னைப்பார்க்க வருகிறேன்உன்னைப் பார்த்துவிட்டுஅவளோடுதான்வீடு திரும்புகிறேன்.................................................உன்னிடம்ஒருமுறைகாதலைச்சொல்வதற்காகஅவளிடம்ஓராயிரம்முறைஒத்திகைபார்த்திருக்கிறேன்.................................................நீ அவளைப்பார்க்கவேண்டுமென்றால்சொல்அனுமன்தன் நெஞ்சைப் பிளந்துராமனிடமேராமனைக் காட்டியது மாதிரிஉன்னிடமேஉன்னைக் காட்டுகிறேன்.................................................

Wednesday, 19 June 2013

என்னவளின் பிரிவென்னும் தீயினால்என் மனமென்னும் மெழுகுவத்தி கொண்டுஎன் கல்லறைக்கு தினம் தினம்...விளக்கேற்றுகின்றேன்.

உயிர் அழும்.
மனம் வலிக்கும்.
கல்லறை திசை தேடி
கால் நடக்கும்.
காதலித்து பார்...